சென்னையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அண்ணா நகரில் 23 ஆயிரத்தை கடந்தும், கோடம்பாக்கத்தில் 23 ஆயிரத்தை நெருங்கியும் வருகிறது. இருப்பினும் தினமும் 500 க்கும் குறைவான பாதிப்புகளே சென்னையில் கணக்கிடப்படுகின்றன. இதனால் கரோனா பரவல் விகிதம் 5 ஆக குறைந்தது. இது மேலும், சோழிங்கநல்லூர் நீங்கலாக அனைத்து மண்டலங்களிலும் பாதிக்கப்பட்டோர் விழுக்காடு 2 ஆக குறைந்துள்ளது. குணமடைந்தோர் விழுக்காடு 96 ஆக உள்ளது.
இதுவரையில் சென்னையில் மொத்தமாக 2 லட்சத்து 12 ஆயிரத்து 014 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 2 லட்சத்து 03 ஆயிரத்து 824 பேர் குணமடைந்துள்ளனர். எஞ்சியுள்ள 4 ஆயிரத்து 374 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 ஆயிரத்து 816 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை பலியாகியுள்ளனர்.
மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் பட்டியல்,
- கோடம்பாக்கம் - 345 பேர்
- அண்ணா நகர் - 433 பேர்
- ராயபுரம் - 296 பேர்
- தேனாம்பேட்டை - 360 பேர்
- தண்டையார்பேட்டை - 259 பேர்
- திரு.வி.க. நகர் - 381 பேர்
- அடையாறு - 320 பேர்
- வளசரவாக்கம் - 320 பேர்
- அம்பத்தூர் - 314 பேர்
- திருவொற்றியூர் - 141 பேர்
- மாதவரம் - 190 பேர்
- ஆலந்தூர் - 189 பேர்
- சோழிங்கநல்லூர் - 72 பேர்
- பெருங்குடி - 163 பேர்
- மணலி - 52 பேர்
இதையும் படிங்க: கடலூர் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!