தமிழ்நாட்டில் கரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற சில மண்டலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வந்த போதும் மாநகராட்சியின் நடவடிக்கையால் சிகிச்சை பெற்று வருவோரின் விழுக்காடு குறைந்தும், குணமடைவோரின் விழுக்காடு அதிகரித்தும் வருகிறது. அதன்படி தேனாம்பேட்டையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் விழுக்காடு பூஜ்யமாகியுள்ளது. அதிகபட்சமாக ஆலந்தூரில் சிகிச்சை பெற்று வருபவர்களின் விழுக்காடு 3 ஆக உள்ளது. மேலும், சென்னையில் மொத்தமாக சிகிச்சை பெற்று வருபவர்கள் 2% ஆக குறைந்தும், குணமடைந்தோரின் விழுக்காடு 96% ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தொற்று பாதித்து சிகிச்சை பெறுவோரின் மண்டல வாரியான கணக்கை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,
- ராயபுரம் - 220 பேர்
- திரு.வி.க. நகர் - 198 பேர்
- வளசரவாக்கம் - 223 பேர்
- தண்டையார்பேட்டை - 84 பேர்
- தேனாம்பேட்டை - 95 பேர்
- அம்பத்தூர் - 233 பேர்
- கோடம்பாக்கம் - 254 பேர்
- திருவொற்றியூர் - 103 பேர்
- அடையாறு - 97 பேர்
- அண்ணா நகர் - 344 பேர்
- மாதவரம் - 147 பேர்
- மணலி - 39 பேர்
- சோழிங்கநல்லூர் - 60 பேர்
- பெருங்குடி - 114 பேர்
- ஆலந்தூர் - 280 பேர்
என மொத்தம் 15 மண்டலங்களில் 4,978 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் 2,09,167 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் 2,00,417 நபர்கள் குணமடைந்துள்ளனர். மேலும் 3,772 நபர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு இறந்துள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் 530 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்