ETV Bharat / city

புதுச்சேரியில் மேலும் 922 பேருக்கு கரோனா - புதுச்சேரி அண்மைச் செய்திகள்

புதுச்சேரி : இன்று (மே.24) 922 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்ற நாள்களில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்து வந்த கரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது.

புதுச்சேரியில் 922 பேருக்கு கரோனா தொற்று உறுதி

author img

By

Published : May 24, 2021, 7:07 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 730 நபர்கள், காரைக்காலில் 134 நபர்கள், மாஹேவில் 21 நபர்கள், ஏனாமில் 37 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இன்று (மே.24) மட்டும் மொத்தம் 922 நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்ற இரண்டு வாரங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் உறுதி செய்யப்பட்டு வந்த தொற்று பாதிப்பு, இன்று குறைந்துள்ளது. மேலும் தொற்று பாதிப்பால் புதுச்சேரியில் 21 நபர்கள், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் ஒருவர் என மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,382ஆக உயர்ந்துள்ளது. மேலும் 15 ஆயிரத்து 835 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றால் மொத்தம் 96 ஆயிரத்து 982 பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 79 ஆயிரத்து 765 பேர் குணமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க ஒன்றிய அமைச்சருக்கு தயாநிதி மாறன் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.