தமிழ்நாட்டில் புதிதாக கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,320ஆக உள்ளது. மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் தற்போது 10 ஆயிரத்து 788 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று(டிச.6) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தேனியில் தனியார் ஆய்வகம் ஒன்றில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் 67 அரசு பரிசோதனை மையங்களும், 161 தனியார் ஆய்வகங்களிலும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 70 ஆயிரத்து 299 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் 1,315 நபர்களுக்கும், ஜார்க்கண்டில் இருந்து தமிழ்நாடு வந்த இரண்டு பேருக்கும், பிகார், மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என 1,320 நபர்களுக்கு கரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 21 லட்சத்து 82 ஆயிரத்து 644 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம் ஏழு லட்சத்து 90 ஆயிரத்து 240 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
அவர்களில் 10 ஆயிரத்து 788 பேர் தற்போது மருத்துவமனையில் மற்றும் தனிமைப்படுத்த மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 1,398 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 67 ஆயிரத்து 659 என அதிகரித்துள்ளது.
அதேசமயம் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் சிகிக்சை பலனின்றி, தனியார் மருத்துவமனையில் 11 பேரும், அரசு மருத்துவமனையில் 5 பேர் என 16 நோயாளிகள் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11,793 என உயர்ந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கும் நோய்தொற்று ஏற்படவில்லை. அரியலூர் மாவட்டத்தில் மூன்று பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆறு பேருக்கும், கள்ளக்குறிச்சி, சிவகங்கை மாவட்டத்தில் தலா ஏழு பேருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்பது பேருக்கும் என ஒற்றை இலக்கத்தில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் விட சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கீழ்கண்டவாறு;
சென்னை மாவட்டம்: 2,17,542
கோயம்புத்தூர் மாவட்டம்: 49,570
செங்கல்பட்டு மாவட்டம்: 48,159
திருவள்ளூர் மாவட்டம்: 41349
சேலம் மாவட்டம்: 30325
காஞ்சிபுரம் மாவட்டம்: 27,886
கடலூர் மாவட்டம்: 24,342
மதுரை மாவட்டம்: 19871
வேலூர் மாவட்டம்: 19571
திருவண்ணாமலை மாவட்டம்: 18769
தேனி மாவட்டம்: 16658
தஞ்சாவூர் மாவட்டம்: 16579
விருதுநகர் மாவட்டம்: 16006
கன்னியாகுமரி மாவட்டம்: 15,828
தூத்துக்குடி மாவட்டம்: 15769
ராணிப்பேட்டை மாவட்டம்: 15684
திருப்பூர் மாவட்டம்: 15776
திருநெல்வேலி மாவட்டம்: 14964
விழுப்புரம் மாவட்டம்: 14701
திருச்சிராப்பள்ளி மாவட்டம்: 13590
ஈரோடு மாவட்டம்: 12709
புதுக்கோட்டை மாவட்டம்: 11185
கள்ளக்குறிச்சி மாவட்டம்: 10702
திருவாரூர் மாவட்டம்: 10562
நாமக்கல் மாவட்டம்: 10581
திண்டுக்கல் மாவட்டம்: 10452
தென்காசி மாவட்டம்: 8131
நாகப்பட்டினம் மாவட்டம்: 7742
நீலகிரி மாவட்டம்: 7578
கிருஷ்ணகிரி மாவட்டம்: 7500
திருப்பத்தூர் மாவட்டம்: 7303
சிவகங்கை மாவட்டம்: 6351
ராமநாதபுரம் மாவட்டம்: 6234
தருமபுரி மாவட்டம்: 6166
கரூர் மாவட்டம்: 4903
அரியலூர் மாவட்டம்: 4586
பெரம்பலூர் மாவட்டம்: 2246
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 927
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 1005
ரயில் மூலம் வந்தவர்கள்: 428
இதையும் படிங்க: ஒரு சில வாக்குகளுக்காக மதவாதிகளோடு கூட்டணி வைக்கவில்லை'- பினராயி விஜயன்!