ETV Bharat / city

தமிழ்நாட்டில் புதிதாக 737 பேருக்கு கரோனா பாதிப்பு - Corona affects 737 new people in Tamil Nadu

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த ஒருவர் உட்பட 737 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு
author img

By

Published : Jun 21, 2022, 6:54 PM IST

சென்னை: கரோனா தொற்று பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பரவல் விகிதம் மாநில அளவில் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஜுன் 21 ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விபரத் தகவலில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை 16,701 நபர்களுக்கு செய்யப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்த 736 பேருக்கும், ஐக்கிய அரசு நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் என 737 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்று கண்டறியப்பட்டது முதல் தற்பொழுது வரையில் 6 கோடியே 57 லட்சத்து 45 ஆயிரத்து 733 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு, 34 லட்சத்து 62 ஆயிரத்து 297 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 4,366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 322 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 19 ஆயிரத்து 905 என உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 383 பேருக்கும் , செங்கல்பட்டில் 128 பேருக்கும், திருவள்ளுரில் 49 பேருக்கும், கோயம்புத்தூரில் 42 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 26 பேருக்கும், கன்னியாகுமரியில் 18 பேருக்கும் என 31 மாவட்டங்களில் 737 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையின் படி பரவல் விகிதம் மாநில அளவில் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 8.5 சதவீதமாகவும், சென்னையில் 5.9 சதவீதமாகவும், கன்னியாகுமரியில் 5.6 சதவீதமாகவும், திருவள்ளுரில் 5.5 சதவீதமாகவும் அதிகரித்து வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆக்சிஜனுடன் கூடிய படுக்கையில் 95 பேரும், ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கையில் 112 பேரும், ஐசியூ படுக்கையில் 16 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.