மக்களவை கூட்டத்தொடரில் மத்திய அரசு வேளாண் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதாக்களுக்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ”மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தகூடிய புதிய வேளாண் சட்டங்களை இறுதி செய்யாமல் கிடப்பில் போட வேண்டும். உடனடியாக மத்திய அரசு இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்” எனக் கோரி காவிரி உரிமை மீட்புக்குழுவினர் புதுச்சேரி ராஜா தியேட்டர் சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், வேளாண் சட்ட மசோதா நகலை தீயிட்டுக் கொளுத்தினர். அப்போது காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும், அவர்கள் மத்திய அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.