சென்னை: தமிழ்நாடு சிறைகளில் கரோனா பரவல் அதிகமானதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிறைக் கைதிகளை நேரில் பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டது.
வீடியோ காலில் பேசிய சிறைக் கைதிகள்
அதற்கு பதிலாக சிறைகளில் ஆன்ட்ராய்டு செல்போன்கள் வழங்கப்பட்டு, வீடியோ கால் மூலமாக தங்களது உறவினர்களிடம் சிறைக் கைதிகள் பேசும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்நிலையில், தற்போது கரோனா பரவல் குறைந்து இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பி வரும் நிலையில் சிறைக் கைதிகளை நேரில் சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என குடும்பத்தினர் பலர், சிறைத்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில் சிறைத்துறை நிர்வாகம் கடந்த 16ஆம் தேதி முதல் பார்வையாளர்கள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி சிறைக் கைதிகளை நேரடியாக சென்று காண செய்ய அனுமதி வழங்கியது.
சிறை கைதிகளின் நேர்காணல்
இந்த அறிவிப்பை அடுத்து, நேற்று (ஆகஸ்ட் 16) மத்திய சிறைகள், கிளை சிறைகள், மாவட்ட சிறைகள் என அனைத்து சிறைகளிலும் நேரடியாக சிறைக் கைதிகளை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஒரே நாளில் 174 ஆண்கள், ஆறு பெண்கள் என மொத்தம் 180 சிறை கைதிகளை அவர்களது வழக்கறிஞர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் கண்டு சென்றுள்ளதாக சிறைத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குடும்பத்தினருடன் பேச அனுமதி... சிறைவாசிகள் மகிழ்ச்சி!