ETV Bharat / city

Perarivalan release: வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரஸ் நாளை போரட்டம்!

பேரறிவாளன் தீர்ப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சியினரின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் நாளை (மே19) போராட்டம் நடத்தப்படும் என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரஸ் நாளை போரட்டம்

author img

By

Published : May 18, 2022, 2:40 PM IST

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை அரசியல் சட்டத்தின் 142ஆவது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை என்றும், அதேநேரத்தில் குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சியினரின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நாளை (மே 19) போராட்டம் நடத்தப்படும் என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், "முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்ச நீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்,

கொலை செய்தவர்கள் தமிழர்கள். அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள் அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள். பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமலேயே இருக்கிறார்கள்.

அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்கிற குரல் ஏன் எழவில்லை?, அவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா? ராஜிவ்வை கொலை செய்தவர்கள். மட்டும்தான் தமிழர்களா? தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நாளை (மே 19) வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் தூணியால் வாயை கட்டிக் கொண்டு "வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது" என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை அறப்போராட்டம் நடத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பேரறிவாளன் விடுதலை : அவர்கள் நிரபராதிகள் அல்ல - காங்கிரஸ்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.