அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் ஊழல் முறைகேடு புகார்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அலுவலர்களுக்கான அலுவலகம், சென்னை பொதிகை வளாகம், பி.எஸ். குமாரசாமி ராஜா சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே அண்ணா பல்கலைக்கழகம், துணைவேந்தர் சூரப்பா தொடர்பாக புகார் கொடுக்க விரும்புபவர்கள் நவ.25ஆம் தேதியிலிருந்து 10 நாள்களுக்குள் மேற்கூறிய விசாரணை அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது inquirycomn.vc.annauniv@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்: மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவிக்கலாம்