சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட போரூர், மாங்காடு, அய்யப்பன்தாங்கல், தனலட்சுமி நகர் ஆகிய பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
போர்க்கால அடிப்படையில் பணிகள்
கடந்த நவம்பர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் வரலாறு காணாத மழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
மேலும், அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர் சாலைப் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி, குறைகளை கேட்டறிந்தார்.
இறுதியாக தனலட்சுமி நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் சூழப்பட்ட குடியிருப்புகளை ஆய்வு செய்தார். பாதிப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்து அவர், சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:தமிழ் தெரிந்தால் மட்டுமே அரசுப் பணி - பிடிஆர் அறிவிப்பு