ETV Bharat / city

'சாலை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்' - ஸ்டாலின் - Dept of Highways and Minor Ports

மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கும், சரக்குகளை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் வகையிலும் சாலை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை ஆய்வுக் கூட்டத்தில் அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

முக ஸ்டாலின், ஸ்டாலின், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, Dept of Highways and Minor Ports

author img

By

Published : Jul 12, 2021, 9:22 PM IST

சென்னை: நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 12) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் சாலைப் போக்குவரத்து மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கும், சரக்குகளை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் வகையிலும் சாலை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

ஆய்வும் அறிவுரையும்

  • நெடுஞ்சாலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், புதிய சாலைகள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்துதல், உறுதிப்படுத்துதல், புதுப்பித்தல், பராமரித்தல், புறவழிச்சாலை / சுற்றுச்சாலை அமைத்தல், புதிய பாலங்களைக் கட்டுதல், பழைய பாலங்களைச் சீரமைத்தல், உயர்மட்ட மேம்பாலம் கட்டுதல், ரயில்வே கடவுக்குப் பதிலாக சாலை மேம்பாலம் / கீழ்ப்பாலம் கட்டுதல், சாலை சந்திப்புகள் / குறுகிய வளைவுகளை மேம்படுத்துதல், சாலைப் பாதுகாப்புப் பணிகள், சாலையின் இருபுற ஓரங்களிலும் மரக்கன்றுகளை வளர்த்தல் போன்ற திட்டங்கள் குறித்து ஆய்வுசெய்யப்பட்டது.
  • நெடுஞ்சாலைத் துறையின் பல்வேறு அலகுகளில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுமேற்கொண்ட ஸ்டாலின், வருங்காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் முறையாகத் திட்டமிட்டு, விரைவாக முடிக்கப்பட வேண்டும் எனவும், சாலைப் பணிகளின்போது இதர அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு இடையூறுகளின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
    முக ஸ்டாலின், ஸ்டாலின், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, Dept of Highways and Minor Ports
    நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
  • மேலும், நெடுஞ்சாலைத் துறையில் பன்னாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்தும், ஒன்றிய அரசின் நிதி மூலம் செயல்படுத்தப்படும் பணிகளான உயர்மட்டச் சாலைகள் அமைத்தல், புறவழிச்சாலைகள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்துதல், மேம்படுத்துதல் பணிகள் குறித்தும் ஸ்டாலின் ஆய்வுமேற்கொண்டார்.
  • நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் பணிகளான துறைமுகங்களை நிர்வகித்தல், கட்டுப்படுத்துதல், ஒழுங்குபடுத்துதல், மேலாண்மை செய்தல், சிறு துறைமுகங்களில் சரக்குகளைக் கையாளுதல், பயணிகள் படகுப் போக்குவரத்து, கன்னியாகுமரி - விவேகானந்தர் பாறையில் படகு தோணித்துறை நீட்டிப்பு குறித்தும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் செயல்பாடுகள், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வுசெய்தார்.

கூட்டத்தில் பங்கேற்றோர்

இந்தக் கூட்டத்தில், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, தலைமைச் செயலர் வெ. இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலர் (நிதித் துறை பொறுப்பு) ச. கிருஷ்ணன், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலர் தீரஜ் குமார், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான எஸ். சிவசண்முக ராஜா, அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: நீட் வேண்டாம் என்பதே அரசின் உறுதியான நிலைப்பாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.