ETV Bharat / city

மருத்துவக் காப்பீடு வசதி தொடங்கிவைத்த ஸ்டாலின் - அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ் செய்தியாளர்களின் குடும்பங்களை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

ஏழை எளியோர் பயன்பெற முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துச் செயல்படுத்துவதற்கான ஆணையை வழங்கி அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளரையும் இதில் பயனாளிகளாக இணைத்துக் காப்பீடு அட்டைகளை வழங்கி திட்டத்தினை மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

cm stalin inaugurates medical insurance scheme for tamil nadu journalist
1.37 கோடி குடும்பங்கள் பயன்பெற
author img

By

Published : Jan 10, 2022, 3:09 PM IST

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர், பருவ இதழ் செய்தியாளரின் குடும்பங்களை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயனாளிகளாக இணைத்து, காப்பீடு அடையாள அட்டைகளை வழங்கினார்.

உயிர்காக்கும் மருத்துவச் சிகிச்சைகளைக் கட்டணமில்லாமல் ஏழை, குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள், அரசு - தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 2009 ஜூலை 23 அன்று தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது.

மேலும், 2012 ஜனவரி 11 முதல் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவத் திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்துடன் இணைந்து 2018 செப்டம்பர் 23 அன்று முதல் செயல்படுத்தப்படுகின்றது. தற்போது செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இம்மாதம் முடிவுபெறுகிறது.

மருத்துவ காப்பீட்டு வசதி தொடங்கி வைத்தார் ஸ்டாலின்
மருத்துவ காப்பீடு வசதியைத் தொடங்கிவைத்தார் ஸ்டாலின்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் 2021-2022ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் அதிக சிகிச்சை முறைகளுடன், பொதுத் துறை காப்பீடு நிறுவனத்தின் மூலம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏழை எளிய திட்டப் பயனாளிகள் அதிகபட்சம் ஆண்டு ஒன்றுக்கு குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் வரையில் கட்டணமில்லா சிகிச்சை பெறும் வகையில் செயல்படுத்தப்படும்.

மேலும், பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு எந்தவித உச்சவரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயனாளியாகச் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

ஏழை எளிய மக்கள் கூடுதல் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம் 72,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு 2021 டிசம்பர் 16 அன்று அரசாணை வெளியிட்டது.

மருத்துவக் காப்பீடு வசதியைத் தொடங்கிவைத்தார் ஸ்டாலின்

அதன்படி, மு.க. ஸ்டாலின் இன்று (ஜனவரி 10) சென்னை, எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நாளைமுதல் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு அதற்கான ஆணையினை வழங்கினார்.

அத்துடன் முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசுக்கும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்காக ரூ.1,248.29 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 11 தொடர் சிகிச்சை முறைகள், 52 முழுமையான பரிசோதனை முறைகள், எட்டு உயர் சிறப்புச் சிகிச்சை முறைகள் உள்ளிட்ட 1090 மருத்துவம் - அறுவை சிகிச்சை முறைகளைக் கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட 714 அரசு மருத்துவமனைகள், 886 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 1600 மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுப் பயன்பெறலாம். அத்துடன் 86 கூடுதல் சிகிச்சை முறைகள் தற்போது செயல்படுத்தப்படும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் வாயிலாக 1.37 கோடி குடும்பங்கள் ஆண்டொன்றுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீட்டு வசதி பெற முடியும். செய்தித் துறையில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர், பருவ இதழ் செய்தியாளரின் குடும்பங்களை ஆண்டு வருமான உச்சவரம்பின்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயனாளிகளாக இணைக்கவும்.

மேலும், இனிவரும் ஒவ்வோர் ஆண்டும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையிடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளரின் பட்டியல்களைப் பெற்று முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கவும் அரசாணை வெளியிடப்பட்டது.

  • பெருந்தொற்றில் இருந்து மக்களின் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்கள் - முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கும்; 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் முன்னெச்சரிக்கைத் தவணை #Covid19 தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். pic.twitter.com/OR5GLjEcA6

    — M.K.Stalin (@mkstalin) January 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையினால் 2020-2021 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட செய்தியாளர் அடையாள அட்டை உடைய 1,414 செய்தியாளரின் குடும்பங்கள் முதல்கட்டமாக இவ்வரசாணையின்படி இத்திட்டத்தில் பயனாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் அங்கீகரிக்கப்பட்ட 10 செய்தியாளர் / பருவ இதழ் செய்தியாளருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான அடையாள அட்டைகளை வழங்கி, திட்டத்தினை தொடங்கிவைத்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.