கோவிட்-19 இரண்டாம் அலை பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கோவிட்-19 கட்டளை மையத்திற்கு நேற்று இரவு (மே 14) சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு ஆய்வு செய்தார்.
மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன் ஒதுக்கீடு போன்ற ஒருங்கிணைப்பு பணிகள் முறையாக செயல்படுகிறதா என்பதை அவர் கேட்டறிந்தார்.
தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை தடையில்லாமல் வழங்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். அப்போது முதலமைச்சரின் செயலாளர்கள் உதயச்சந்திரன், உமாநாத், தாரேஸ் அகமது ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 'போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை': கோரிக்கை வைத்த எதிர்க்கட்சித் தலைவர்