ETV Bharat / city

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை - tamilnadu cm meeting

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஜனவரி 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

tamilnadu cm meeting
முதலமைச்சர் கே பழனிச்சாமி
author img

By

Published : Jan 24, 2021, 5:12 PM IST

சென்னை: ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஜனவரி 29ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

ஜனவரி 29ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் காலை 10 மணி அளவில் தொடங்கி நடைபெறவுள்ளது. தொடர்ந்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து கூடுதல் தளர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு விதமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் தளர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. தேர்தல் நேரம் என்பதால் கூடுதல் எண்ணிக்கையில் தொண்டர்களை அனுமதிப்பது குறித்தும், திரையரங்கு பார்வையாளர்களை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இச்சூழலில் முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளி குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு குறைந்துள்ளது குறிப்பிடதக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.