முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில், மதுரை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 5 கோடியே 60 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களுடன் கூடிய சேமிப்பு கிடங்கினை, காணொலி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும், 47 கோடியே 36 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைத் துறை கட்டடங்களை திறந்து வைத்து, விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை வழங்கிடும் வகையில், 23 டிராக்டர்கள் மற்றும் 17 மண் அள்ளும் இயந்திர வாகனங்களையும் முதலமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ’சமூக நீதிக்கு ஆளுநர் தடையாக இருக்கக்கூடாது’ - ராமதாஸ்