ETV Bharat / city

அண்ணா நினைவு நாள் பொது விருந்து - முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு!

சென்னை: அறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி இன்று நடைபெற்ற கோயில் பொது விருந்து நிகழ்ச்சிகளில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

memorial
memorial
author img

By

Published : Feb 3, 2020, 5:45 PM IST

பேரறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள கோயில்களில் பொது விருந்து நடந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நகரின் பல்வேறு கோயில்களில் நடந்த பொது விருந்தில் கலந்துகொண்டனர்.

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கே.கே. நகர் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் நடந்த பொது விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கோயிலில் சாமி கும்பிட்ட அவருக்கு நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அனைத்துத் தரப்பு மக்களுடன் அமர்ந்து முதலமைச்சர் விருந்து உண்டார். அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் அவர் நன்றாகச் சாப்பிடுமாறு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பா. வளர்மதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நடந்த விருந்தில் கலந்து கொண்டார். கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலில் நடந்த பொது விருந்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டார்.

அண்ணா நினைவு நாள் பொது விருந்து - முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு

இதேபோல, அமைச்சர் ஜெயக்குமார் ராயப்பேட்டை சித்தி புத்தி விநாயகர் கோயிலிலும், அமைச்சர் செங்கோட்டையன் அடையாறு பத்மநாப சுவாமி கோயிலிலும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கந்தக்கோட்டம் முருகன் கோயிலிலும் பொது விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று காலை முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மலர்த் தூவி மரியாதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அண்ணாவின் 51ஆவது நினைவுதினம் - முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை

Intro:Body:அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள கோயில்களில் சமபந்தி விருந்து நடந்தது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கோவில்களில் நடந்த சமபந்தி விருந்தில் கலந்துகொண்டனர்.

இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேகே நகர் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நடந்த விருந்தில் கலந்து கொண்டார். அதேபோல, அமைச்சர் ஜெயக்குமார் ராயப்பேட்டை சித்தி புத்தி விநாயகர் கோயில், அமைச்சர் செங்கோட்டையன் அடையாறு பத்மநாப சுவாமி கோயில், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காந்த கோட்டம் கோயில் ஆகிய பகுதிகளில் கலந்து கொண்டனர். முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று காலை முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.