ETV Bharat / city

மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அரசு ஆதரவாக இருக்கும் - அபே ஜெரி

சென்னை: மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கும், முயற்சிக்கும் அரசு ஆதரவாக இருக்கும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமை அலுவலர் அபெ ஜெரி தெரிவித்துள்ளார்.

அபே ஜெரி
author img

By

Published : May 7, 2019, 8:28 PM IST

சென்னை அருகே ஆவடியில் உள்ள வேல்ஸ் கல்லூரியில் 15ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமை அலுவலர் அபே ஜெரி கலந்து கொண்டு 22 மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களையும் 522 இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். சிறப்புரை ஆற்றிய அவர், 5 1/2 வயது சிறுவன் புதிய கண்டுபிடிப்புக்கான ஜனாதிபதி விருது பெற்றுள்ளான் எனவே தற்போதுள்ள சூழலில் சாதனைகளுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வயது தடையாக இருப்பதில்லை, ஆக்கமும் முயற்சியுமே முக்கிய பங்காற்றுகிறது என தெரிவித்தார்.

மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அரசு ஆதரவாக இருக்கும் - அபே ஜெரி

இந்தியாவில் ஒருபுறம் ஆயிரக்கணக்கான பிரச்னைகள் உள்ளன மறுபுறம் உங்களைபோன்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருக்கின்றனர். மாணவர்கள் நீங்கள் அவற்றிற்கு தகுந்த தீர்வை தரக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என ஆலோசனை கூறினார். மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கும், முயற்சிக்கும் அரசு ஆதரவாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

07.05.19
ஆவடி
ஆ.கார்த்திக்

மாணவர்களின் கண்டுபிடிப்புக்களுக்கும் முயற்சிக்கும் அரசு துறை ஆதரவாக இருக்கும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமை தகவல் அதிகாரி அபே ஜெரி தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே ஆவடியில் உள்ள வேல் மல்டிடெக்  கல்லூரியில் 15ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இதில் மனிதவள மேம்பாட்டு துறையின் புதிய தகவல் கண்டுபிடிப்பு துறை முதன்மை அதிகார அபே ஜெரி கலந்து கொண்டு அண்ணா பல்கலைக்கழக அளவில் ரேங்க் பட்டியலில் இடம்பெற்ற 22 மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களையும் 522  இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.அப்போது பேசிய அவர் 5 1/2 வயதுடைய சிறுவன் புதிய கண்டுபிடிப்புக்கான ஜனாதிபதி விருது பெற்றுள்ளான் எனவே  தற்போதுள்ள சூழலில் சாதனைகளுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வயது தடையாக இருபதில்லை,ஆக்கமும் முயற்ச்சியுமே முக்கியப்பங்காற்ருகின்றன.இந்தியாவில் ஒருபுறம் ஆயிரக்கணக்கான பிரச்சனைகள் உள்ளன மறுபுறம் உங்களைபோன்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருக்கின்றனர் மாணவர்கள் நீங்கள் அவற்றிற்கு தகுந்த தீர்வை தரக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என ஆலோசனை கூறினார்.தொடர்ந்துபேசிய அவர் உங்களது அறிவினையும் நாட்டிற்க்காக பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட சிறு முயற்சியே ஸ்மார்ட் ஹாகத்தோன் என கூறிய அவர் இந்த ஸ்மார்ட் ஹாகத்தோன் பற்றி எவ்வளவு பேருக்கு தெரிந்துள்ளது என கேள்வி எழுப்பினார் அப்போது ஒரு சிலரே அதுபற்றி தெரியும் என கூறியதும் நான் தற்போது தோல்வி அடைந்துவிட்டேன் வரும்காலங்களில் மேலும் கடினமாக உழைத்து இதுகுறித்ததான விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என கூறினார்.கல்லூரி முடித்து வெளியில் செல்லும்  நீங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகூறுபவராக இருந்தால் மட்டுமே நல்ல தொழிநுட்பவாதியாக,நல்ல மனிதர்களாக,நம் நாட்டிற்க்கான நல்ல மனிதவளங்களாக வெற்றிபெற முடியும் என தெரிவித்தார்.மேலும் மாணவர்கலாகிய நீங்கள் பிரச்சனைகளை கற்பனையாக இல்லாமல் காட்சிகளாக உணர்ந்தாள் மட்டுமே பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவர்களாக இருக்க முடியும் என அறிவுரை வழங்கினார். சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளை முதலில் அடையாளம் காணுங்கள் பின்னர் அதுகுறித்து செயலாகங்களில் ஈடுபட்டு அதற்கு விளக்கங்களை வழங்குங்கள் அந்த பிரச்சனைக்கு தீர்வுகள் வழங்க முயற்சிக்க வேண்டும் என பேசினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.