ETV Bharat / city

'நம்ம சென்னை' எழுத்து வடிவம்: சென்னையில் உருவாகும் புதிய செல்பி ஸ்பாட்! - மெரினாவில் புதிய செல்பி ஸ்பாட்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுவரும் நம்ம சென்னை எழுத்து வடிவம் அமைக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், பொங்கலுக்குள் அது பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உருவாகும் புதிய செல்பி ஸ்பாட்

author img

By

Published : Dec 29, 2020, 7:50 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களின் பெயர்களைக் கொண்டு 'ஐ லவ் கோவை', 'ஐ லவ் திருச்சி' போன்ற எழுத்து வடிவம் பிரசித்தி பெற்ற பூங்காக்கள் அல்லது பிரபலமான இடங்களில் அமைக்கப்பட்டுகின்றன. அந்த வகையில், தற்போது சென்னை மெரினா கடற்கரையில் நடந்துவந்த ’நம்ம சென்னை’ என்ற எழுத்து வடிவம் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.

மெரினா கடற்கரையில், ராணி மேரி கல்லூரி எதிரில், சென்னை மாநகராட்சி, ’ஸ்டார்ட் இந்தியா’ எனும் அமைப்புடன் இணைந்து ’நம்ம Chennai’ எனும் எழுத்து வடிவம் அமைத்து வருகிறது. சுமார் 10 அடி உயரத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 22 லட்சம் ரூபாய் செலவில் இது அமைக்கப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய மாநகராட்சி துணை ஆணையர் மேகநாதன் ரெட்டி,"இந்த நம்ம சென்னை எழுத்து வடிவம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 22 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. தரைத்தளம் அமைக்கப்பட்டு, இரவு நேரங்களில் மின்னொளிகள் அமைத்து மிளிரும் வகையில் வடிவமைத்து வருகிறோம். மெரினா கடற்கரையின் ஒரு முக்கிய செல்ஃபி ஸ்பாட்டாக இது இருக்கும். பொங்கல் முன்பாக இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசியலுக்கு வர வேண்டும்: ரஜினி வீட்டு முன் ரசிகர்கள் தர்ணா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.