ETV Bharat / city

சென்னை காவல் துறைக்கு சிசிடிவி கேமரா வழங்கிய அதிமுக!

சென்னை: வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் 500 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் வழங்கப்பட்டன.

chennai
chennai
author img

By

Published : Jan 11, 2020, 4:23 PM IST

வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சென்னை காவல் துறைக்கு, 500 சிசிடிவி கேமராக்கள் வழங்கும் நிகழ்ச்சி தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் தினகரன், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பேசியபோது, “இந்த கண்காணிப்பு கேமராக்கள் வருவதற்கு முன்பு கடுமையான மன அழுத்தம், உடல் சோர்வு எங்களுக்கு ஏற்படும். ஆனால், இவை அமைக்கப்பட்ட பின்பு, எங்களது பணிகள் சற்று வித்தியாசமாக மாறியுள்ளது. திருட்டு நடந்தால் அதை கண்டுபிடிப்பது மிகக் கடினமாக ஒரு காலத்தில் இருந்தது. 2010க்குப் பிறகு தங்கத்தின் விலை மிக அதிகமானதால் செயின் பறிப்பு நிகழ்வுகள் அதிகமாகின. ஆனால், கேமராக்கள் அமைக்கப்பட்ட பின்பு 50% செயின் பறிப்பு குற்றங்கள் குறைந்துள்ளன. அப்படியே நடந்தாலும் அவர்களை இரண்டு, மூன்று நாட்களில் பிடித்து விடுகிறோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் என்னிடம், இத்திட்டத்தை பொதுமக்கள் உதவியோடு செயல்படுத்துங்கள் என அறிவுரை வழங்கினார். அதன்படி சென்னை மாநகர மக்கள் தாராளமாக உதவி செய்ததால், தற்போது 70 விழுக்காடு அளவிற்கு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எங்களது இலக்கு 3 லட்சம் கேமராக்கள்.

கேமராக்கள் அமைக்கப்பட்ட பின்பு 50% செயின் பறிப்பு குற்றங்கள் குறைந்துள்ளன

அதேபோல், காவலன் செயலி திட்டமும் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்துக் காவலர்களும் பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியதால், 10 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர் “ என்றார்.

இதையும் படிங்க: 4 கிலோ தங்கக் கட்டிகளை திருடிச் சென்ற ஈரானிய கொள்ளையர்கள்!

Intro:வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் 500 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை சென்னை மாநகர ஆணையரிடம் மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் வழங்கினார்

Body:சென்னை மாநகர காவல்துறை g500 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக வழங்கியது

வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் 500 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வழங்கும் நிகழ்ச்சி தண்டையார்பேட்டை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன், வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன், இணை ஆணையர் கபில் குமார் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

பின்னர் சென்னை மாநகர ஆணையர் இயக்கிய விசுவநாதன் பேசியபோது

வண்ணாரப்பேட்டை மாவட்டத்தில் 500 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ராஜேஷ் வழங்கியுள்ளார் அவருக்கு எனது பாராட்டுக்கள் அந்த கேமராவில் 853 கடந்த ஒரு மாதமாக ஆர்கே நகர் தண்டையார்பேட்டை கொருக்குப்பேட்டை பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது மற்ற கேமராக்களை இன்று அவர் வழங்கியுள்ளார்

எங்களது பணிகள் இப்போது முற்றிலும் மாறியுள்ளது இந்த கண்காணிப்பு கேமராக்கள் வருவதற்கு முன்பு கடுமையான மன அழுத்தம் உடல் சோர்வு முன்பெல்லாம் எங்களுக்கு ஏற்படும் ஆனால் இந்த கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்ட பின்பு எங்களது பணிகள் சற்று வித்தியாசமாக மாறியுள்ளது திருட்டு நடந்தாலும் அதை கண்டுபிடிப்பது மிகக் கஷ்டமாக ஒரு காலத்தில் இருந்தது 2010 க்கு பிறகு தங்கத்தின் விலை மிக அதிகமாக ஆனதால் ஜெயின் பாதிப்புகள் அதிகமாக நடக்க ஆரம்பித்து டெல்லியில் இருந்து வந்து கொடு செயின் பறிப்பில் ஈடுபட்ட னர் கல்லூரி மாணவர்கள் முதல் பழைய குற்றவாளிகள் ஒரு செய்தித்தாளை லட்சக்கணக்கில் பணம் கிடைப்பதால் இந்த செயல்களில் ஈடுபட்டனர் ஆனால் இந்த கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்ட பின்பு 50% செயின் பறிப்பு குறைந்துள்ளன அப்படியே நடந்தாலும் அவர்களை இரண்டு மூன்று நாட்களில் நாங்கள் கண்டு பிடித்து விடுகிறோம் அதனால் குற்றங்கள் குறைந்துள்ளன எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இந்த கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது

இது கமிஷனரின் திட்டம் என்று கூறுகிறார்கள் ஆனால் இது தமிழக முதல்வர் என்னிடம் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் உதவியோடு நீங்கள் செயல்படுத்துங்கள் என அறிவுரை வழங்கினார் அதன்படி கடை நிலை காவலர் வரை இது குறித்து பொது மக்களிடம் உதவி கேட்டும் அதன் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்து கூறி இந்த கண்காணிப்பு கேமரா அமைக்க உதவி கேட்டதால் உலகில் எந்த ஊரிலும் இல்லாத வகையில் சென்னை மாநகர மக்கள் தாராளமாக உதவி செய்ததால் தற்போது 70 சதவீத அளவிற்கு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன எங்களது இலக்கு 3 லட்சம் கேமராக்கள் இந்த திட்டத்திற்கு தமிழக அரசின் விருதும் மத்திய அரசின் விருதும் பெற்றுள்ளோம் இந்த முயற்சியில் ஒவ்வொரு காவலரும் ஈடுபட்டதால் பொதுமக்களின் முயற்சியாலும் கிடைத்த வெற்றி

அதேபோல் காவலன் செயலி என்ற திட்டமும் நல்ல வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது அனைத்து காவலர்களும் பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் இன்று 10 லட்சம் பேர் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து கொண்டுள்ளனர் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் பதிவிரக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறினார்.

Conclusion:வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் 500 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை சென்னை மாநகர ஆணையரிடம் மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் வழங்கினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.