திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் 32 குளங்கள் உள்ளன. இந்தக் குளங்கள் திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்குள்பட்ட நெடும்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நீராதாரமாக விளங்கிவருவதுடன், சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் செய்வதற்கும் பயன்பட்டுவருகிறது.
இந்நிலையில், நிலத்தடி நீரின் அரணாக விளங்கும் இக்குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகப் பொறியாளர், திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி, திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குளங்கள் ஆக்கிரமிப்பு குறித்து நேரில் ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய திருத்துறைப்பூண்டி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இதையும் படிங்க: ’முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம்' - அய்யாக்கண்ணு