ETV Bharat / city

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி! - விவசாயிகள் போராட்டம்

சென்னை: தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் நடத்தும் காத்திருப்பு போராட்டத்துக்கு ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai High Court allow the Formers protest
author img

By

Published : Oct 17, 2019, 8:46 PM IST

தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும், விவசாயக் கடன்கள் வசூலிப்பதைத் தள்ளி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயச் சங்கத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுகளிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 30 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதற்காக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே அனுமதி கோரி, ஜூன் 11ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை சென்னை காவல் ஆணையர் கடந்த ஜுன் 19ஆம் தேதி நிராகரித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து, 30 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி அய்யாகண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, காத்திருப்பு போராட்டம் சட்டத்துக்கு புறம்பானது என்பதாலும், ஒரு நாள் மட்டுமே போராட்டத்துக்கு அனுமதி வழங்கும் நடைமுறை இருப்பதாகக் கூறி அய்யாகண்ணுவின் மனு நிராகரிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அக்டோபர் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டத்திற்கு அனுமதி அளித்தார். மேலும் போராட்டத்திற்கு காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என அய்யாகண்ணுக்கு அறிவுறுத்தி உத்தரவிட்டார்.

Intro:Body:தமிழககத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் நடத்தும் காத்திருப்பு போராட்டத்திற்கு ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும், விவசாய கடன்கள் வசூலிப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுகளிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 30 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

இதற்காக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே அனுமதி கோரி ஜூன் 11 ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை சென்னை காவல் ஆணையத் கடந்த ஜுன் 19 ம் தேதி நிராகரித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து, 30 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி அய்யாகண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு எம் எஸ் ரமேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, காத்திருப்பு போராட்டம் சட்டத்திற்கு புறம்பானது என்பதாலும், ஒரு நாள் மட்டுமே போராட்டத்திற்கு அனுமதி வழங்கும் நடைமுறை இருப்பதாக கூறி அய்யாகண்ணு வின் மனு நிராகரிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அக்டோபர் 21 ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டத்திற்கு அனுமதி அளித்தார். மேலும் போராட்டத்திற்கு காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என அய்யாகண்ணுவுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.