ETV Bharat / city

கொரியர் டெலிவரி செய்ய இருந்த பையை அலேக்காக தூக்கி சென்ற திருடர்கள் - அதிர்ச்சியூட்டும் சிசிடிவி!

முகலிவாக்கத்தில் டெலிவரி செய்பவர் வைத்திருந்த பையைத் திருடர்கள் அலேக்காக தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

author img

By

Published : May 22, 2022, 12:50 PM IST

கொரியர் டெலிவரி செய்ய இருந்த பையை அலேக்காக தூக்கி சென்ற திருடர்கள்!- அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி

சென்னை:மாங்காடு அடுத்த முகலிவாக்கம் பட்டம்மாள் நகர், குருசாமி தெரு பகுதியில் இளைஞர் ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள வீட்டிற்கு வந்த கொரியரை டெலிவரி செய்வதற்காக மோட்டார் சைக்கிளை கொண்டு வந்து நிறுத்தினார். அந்த வீட்டிற்கு வந்த பொருளை மட்டும் எடுத்துக்கொண்டு மீதம் உள்ள கொரியர் அடங்கிய பையை மோட்டார் சைக்கிளின் மீது வைத்து விட்டு, வாடிக்கையாளரின் வீட்டின் உள்ளே சென்று டெலிவரி செய்து விட்டு வந்தபோது கொரியர் பை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் கொரியர் பையை வைத்துவிட்டுச் செல்லும் மோட்டார் சைக்கிளை நோட்டமிட்டு, பின்னர் அந்த நபர் உள்ளே சென்றவுடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றபடியே அந்த பையை அசால்ட்டாக தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

அந்த கொரியர் பையில் கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், பாஸ்போர்ட்டுகள், செல்போன்கள் என விலை உயர்ந்த பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து மாங்காடு போலீசில் புகார் அளித்ததின் பேரில் மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர் திருட்டில் ஈடுபட்டவர்கள்:மேலும் இந்த இரண்டு நபர்கள் முகலிவாக்கம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளின் முன்பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டிகளின் மீதுள்ள இரும்பு மூடிகளை திருடிச் செல்லும் நபர்கள் என்பதும் தொடர்ந்து போலீசாருக்கு சவால்விட்டு குறிப்பிட்ட இந்தப் பகுதிகளிலேயே திருடி வருவதும் தெரியவந்துள்ளது.

கண்காணிப்பு கேமரா காட்சிகள் இருந்தும் போலீசார் அந்த இரண்டு நபர்களையும் பிடிப்பதில் மெத்தனம் காட்டி வருவதால், இந்தப் பகுதியில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போலீசாருக்கு சவால் விடும் வகையில் முகலிவாக்கத்தை மட்டும் குறி வைத்து திருடும் இரண்டு திருடர்களைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இதையும் படிங்க:சத்தீஸ்கரில் டீசல் திருடும் கும்பல் போலீஸை மிரட்டும் பரபரப்பு வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.