ETV Bharat / city

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகள் வெளியிட்ட முதலமைச்சர்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கையின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் பல்வேறு துறைகளுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

palanisami
palanisami
author img

By

Published : Mar 13, 2020, 1:29 PM IST

சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் இன்று வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

வனத் துறை

1. சென்னை வேளச்சேரியில், புதிதாகக் கட்டப்பட்டுவரும் வனத் துறை தலைமை அலுவலகத்திற்குத் தேவையான மின் சாதனங்கள், மேசை நாற்காலி, கண்காணிப்புக் கேமரா அமைத்தல் ஆகியவற்றுக்கு 22 கோடியே 75 லட்சம் ரூபாய் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்படும்.

2. வண்டலூர் பூங்காவில் வன உயிரினங்களை மிக அருகில் காணும் வகையில், ‘விலங்குகள் உலாவிட உலகம்’ 11.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

3. திண்டுக்கல் சிறுமலை காப்புக்காடு, பல அரியவகை உயிரினங்களைக் கொண்டுள்ளதால் அங்கு பூங்கா, பார்வையாளர்கள் வசதி ஆகியவற்றைக் கொண்ட ‘சிறு வன உயிரினப் பூங்கா’ 40 ஹெக்டேர் பரப்பளவில் 10 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

4. சேலம், குரும்பப்பட்டியில் உள்ள சிறு வன உயிரினப்பூங்கா, ‘நடுத்தர வன உயிரினப் பூங்கா’வாக 8 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும்.

5. இயற்கை, மனிதர்களால் வனங்களில் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுக்கும்வகையில் 23.26 கோடியில் சிறப்பு வனக்காவல் பணியமைப்பு மற்றும் தீத்தடுப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும்.

6. மனித - யானை மோதலைத் தடுக்கும்வகையில் தருமபுரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் எஃகு கம்பிகளுடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் தூண்களை நிறுவி ஐந்தடுக்கு கம்பிவேலிகள் 60 கி.மீ. தூரத்திற்கு 21 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

சுற்றுச்சூழல் துறை

1. நடப்பு நிதியாண்டில், நாமக்கல், ராமநாதபுரம், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகங்களுக்கு சுமார் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

2. கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள செங்குட்டை, வண்ணான்குட்டையைத் தூர்வாரி பாதுகாப்புச் சுவருடன் கூடிய நடைபாதை, படகு இல்லம், மின் விளக்குகள், சிறுவர் பூங்கா ஆகியவை எட்டு கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

3. ஆரணி சூரியகுளத்தில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க தனியாக ஒரு கழிவுநீர் கால்வாய் ஏற்படுத்தவும், குளத்தினை தூர்வாரி கரையினை பலப்படுத்தவும் 6.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை

1. வரும் கல்வியாண்டில், 5. 72 கோடி ரூபாய் மதிப்பில் 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். மேலும், 10 அரசு தொடக்கப்பள்ளிகள் மூன்று கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில், நடுநிலைப்பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும். தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்.

2. வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் 26.25 கோடி ரூபாயில், தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஒன்பது கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

3. 30 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் 55 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும், தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 21 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவிலும் ஏற்படுத்தப்படும்.

4. முதற்கட்டமாக 1,890 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், கண்காணிப்புக் கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் மீதமுள்ள 4,282 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் 48 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்புக் கேமரா வசதி அமைத்துத் தரப்படும்.

5. அரசுப் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பராமரிப்பு, செப்பனிடுதல் பணிகளுக்கான மானியத் தொகை 38 கோடியே 50 லட்சம் ரூபாயிலிருந்து 100 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை

1. திருப்பூர் மாவட்டத்தில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் கொண்ட புதிய மாவட்ட விளையாட்டு வளாகம், 18 கோடி ரூபாய் செலவில் அமைத்துத் தரப்படும்.

2. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆறு உயர் செயல்திறன் அகாதமிகள் ஏற்படுத்தப்படும். தடகளம், கையுந்து பந்து, கால்பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கிலும், வளைகோல் பந்து விளையாட்டுக்கு மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கிலும், நீச்சல் விளையாட்டுக்கு வேளச்சேரி நீச்சல் குள வளாகத்திலும் இந்த உயர் செயல்திறன் அகாதமிகள், 3.89 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

3. கேரம், டேக்வாண்டோ, ஜூடோ, வாள் சண்டை, பிரிட்ஜ், இதர உள்ளரங்க விளையாட்டுகளுக்கான மாநில அளவிலான ஒரு பயிற்சி மையம், 12.30 கோடி ரூபாய் செலவில் ஐந்து தளங்களைக் கொண்ட விளையாட்டு வளாகம், சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் அமைக்கப்படும்.

உயர் கல்வித் துறை

1. தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பொறியியல் கல்லூரிகள், 45 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் உள்ள கட்டடங்களை மேம்படுத்தவும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும், முதல்கட்டமாக இந்தாண்டு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

2. பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தேர்வுசெய்யப்படும் 10 ஆயிரம் மாணவர்கள், கள அனுபவம் பெறும் வகையில் ஒரு மாணவனுக்கு 16 ஆயிரத்து 600 ரூபாய் வீதம் நிதி உதவி வழங்க, 16 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

3. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில், உயர் மின்னழுத்த பகிர்மான அமைப்பை சிறப்பான முறையில் இயக்கி பராமரிக்க, 6.33 கோடி ரூபாய் தொடர் செலவினத்தில், 61 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.

4. ஆசியாவிலேயே முதன்முதலாக தொடங்கப்பட்ட பெருமைக்குரிய, சென்னை, சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் கட்டடத்தை புனரமைக்க, 10.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

5. சென்னை, மாநிலக் கல்லூரியின் கட்டடங்கள் 10

கோடி ரூபாயில் புனரமைக்கப்படும்.

6. பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தும்வகையில், மின் வாகனங்கள் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆராய்ச்சிக்காக அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும், சுகாதாரம் மற்றும் ஆற்றல் தொடர்பான ஆராய்ச்சிக்காக பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கும், புற்றுநோய் ஆராய்ச்சிக்காக பாரதியார் பல்கலைக்கழகத்திற்கும், உயிர் மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிக்காக மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கும், உயிர் மருத்துவ பயன்பாடுகள் குறித்த ஆராய்ச்சிக்காக சென்னை பல்கலைக்கழகத்திற்கும் தலா 35 கோடி ரூபாய் வீதம், மொத்தம் 210 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

7. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடங்கள் கட்டவும், கணினி, உபகரணங்கள், மரத்தளவாடங்கள் வாங்கவும் 150 கோடி ரூபாய் வழங்கப்படும்.

இதையும் படிங்க: "சிறுபான்மையின மக்களிடம் அச்ச உணர்வை ஸ்டாலின் ஏற்படுத்துகிறார்" முதலமைச்சர் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.