சென்னை: குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று, விடுதலை செய்யப்டும் கைதிகளின் மறுவாழ்வுக்கு உதவும் வகையில், ‘விடுதலை செய்யப்பட்ட கைதிகள் உதவி சங்கம்’ (Discharged Prisoners Aid Society) பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் தற்போது சிறையிலிருந்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட 10 கைதிகளுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரங்களை, உதவி சங்கத்தின் இயக்குநர் ஞானேஸ்வரன், சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங்கிடம் வழங்கினார். சிறையில் இருக்கும்போது தையல் பயிற்சி பெற்ற கைதிகளுக்கு இந்த தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த உதவி சங்கத்தின் மூலம் இந்த ஒரு வருடத்தில் மட்டும் சிறையிலிருந்து வெளியே வந்த 87 கைதிகளுக்கு 38 லட்சத்து 40ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆட்டோ ரிக்ஷாக்கள், கறவை மாடுகள், சிறிய கடைகள், தட்சு கருவிகள், வெல்டிங் இயந்திரம் போன்ற பல நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த உதவிகள் மூலம் முன்னாள் கைதிகளின் வாழ்க்கை மறு வாழ்வு பெறும் எனத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 2,202 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்