ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு: நீதிமன்றத்தை நாடிய அதிமுக - local body

ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Sep 17, 2021, 6:59 PM IST

தமிழ்நாட்டில் சில மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டதை அடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 13ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

செப்டம்பர் 15ஆம் தேதிமுதல் 22ஆம் தேதிவரை வேட்புமனுக்கள் பெறப்படும் என்றும், அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அக்டோபர் 16ஆம் தேதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஒன்பது மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்த எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.

அந்த மனுவில், "மாநிலம் முழுவதும் அல்லாமல் ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படுவதால் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்த எந்தக் காரணமும் இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலே ஒரே கட்டமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது கள்ள ஒட்டு போடுவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாகப் போய்விடும்" என அச்சம் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டுமென்ற நோக்கில் ஆளும் கட்சி ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதால் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும், கரோனா விதிகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகவும் இன்பதுரை குறிப்பிட்டுள்ளார்.

அந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒன்றிய அரசுப் பணியாளர்களைத் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், பரப்புரை முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை காணொலி பதிவுசெய்ய வேண்டும், பறக்கும் படைகளை அமைத்து பணப்பட்டுவாடாவை தடுப்பதுடன் தேர்தல் பணிக்கு மத்திய ரிசர்வ் படையை அமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்துள்ளதாகவும் தனது மனுவில் தெரிவித்துள்ளார் இன்பதுரை.

மேலும், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 2006ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், தற்போது இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதால் மீண்டும் வன்முறை வெடிக்க வாய்ப்பு இருப்பதால், எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை மனுவை மாநில தேர்தல் ஆணையம் பரிசீலிக்குமாறும், தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற தகுந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டுமெனவும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம்: நடவடிக்கை எடுக்க ஆணையம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.