ETV Bharat / city

புதுச்சேரிக்கு இன்றுமுதல் பேருந்துகள் இயக்கம்

ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து, இன்றுமுதல் (ஜூலை 12) தமிழ்நாட்டிலிருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

புதுச்சேரிக்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கம்

author img

By

Published : Jul 12, 2021, 3:11 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக, மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசித்து தமிழ்நாடு அரசு ஊரடங்கு விதிகளைத் தளர்த்தியது.

அதனைத் தொடர்ந்து இன்றுமுதல் (ஜூலை 12) தமிழ்நாட்டிலிருந்து, புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் பேசுகையில், “முதற்கட்டமாக குளிர்சாதன வசதியற்ற பேருந்துகள் மட்டும் இயக்கப்பட உள்ளன. சென்னை, விழுப்புரம், திண்டிவனம், சிதம்பரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 170-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும். கடைசிப் பேருந்து இரவு 9 மணியளவில் இயக்கப்படும். பொதுமக்களின் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” என்றனர்.

50 விழுக்காடு இருக்கைகளுடனே பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவு, மக்கள் கூட்டம் அதிகம் உள்ள வழித்தடங்களில் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை எனவும் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு, வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.