சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு குஷ்பு, வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. யாரை நம்பியும் நாங்கள் இல்லை.
இருப்பினும் பாஜக-அதிமுக கூட்டணி எப்போதும் செயல்பட்டு வரும். நீட் மசோத குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பிய அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிப்படையாக மக்களுக்கு காண்பிக்கவில்லை. 2010ஆம் ஆண்டு நீட் தேர்விற்கு காங்கிரஸ் கையெழுத்திட்டபோது, திமுக கூட்டணியில் இருந்தது.
பொங்கல் தொகுப்பில் குளறுபடி நடந்துள்ளது. குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தார். இன்னும் கொடுக்கவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் ஹிஜாப், காவி துண்டு அணிந்து செல்ல கூடாது. சீருடைகளில் மட்டுமே செல்ல வேண்டும். கல்வி நிலையங்களில் சாதி மதம் பார்க்கக் கூடாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராகுலின் சமூக வலைதளப் பக்கத்தை ஹேக் செய்வதால் பாஜகவுக்கு லாபம் கிடையாது - குஷ்பு