ETV Bharat / city

இந்திய மருத்துவப் பட்டயப் படிப்பு: நவம்பர் 18 முதல் விண்ணப்பம் - பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பம்

இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதித் துறையில் ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு (D.I.P.), நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு (D.N.T.) ஆகியவற்றில் சேர்வதற்கு நவம்பர் 18ஆம் தேதிமுதல் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Application for Diploma in Indian Medicine, Diploma in Indian Medicine, Indian Medicine, diploma in pharmacist, diploma nursing therapy, ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு, நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு, பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பம், இந்திய மருத்துவ பட்டயப் படிப்பு
இந்திய மருத்துவ பட்டயப் படிப்பு
author img

By

Published : Nov 16, 2021, 8:02 AM IST

சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதித் துறை இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "2021-2022ஆம் கல்வியாண்டிற்கான இரண்டரை ஆண்டு கால அளவுள்ள ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு (D.I.P.), நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு (D.N.T.) பயில அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் 12ஆம் வகுப்பு அறிவியல் பாடங்களை எடுத்துத் தேர்ச்சிப் பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

விருப்பமுள்ள நபர்கள் படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பினை நவம்பர் 18ஆம் தேதிமுதல் டிசம்பர் 10 மாலை 5 மணிவரை மட்டும் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும், விவரங்கள், தகவல் தொகுப்பேடு, விண்ணப்பப் பதிவிறக்கம், அதனின் கட்டணம், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதிமுறைகள், படிப்புகளின் விவரம், சிறப்புப் பிரிவினர், அடிப்படைத் தகுதி, கல்விக் கட்டணம், பிற விவரங்களுக்கு மேற்குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்திற்குச் சென்று அறிந்துகொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொறியியல் மாணவர்களுக்கு டிச. 13 முதல் பருவத்தேர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.