தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்தின் முதல் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்புத் துறைச் செயலர் கோபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், துன்புறுத்தபடுவதிலிருந்து பிராணிகளை பாதுகாத்தல், பிராணிகளின் தொல்லை மற்றும் பயத்திலிருந்து மக்களை பாதுகாப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், பிராணிகளை பருவ நிலைக்கு ஏற்றவாறு பாதுகாத்தல், பிராணிகளை அவற்றின் இனத்தோடு வாழ வழிவகை செய்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.