ETV Bharat / city

1 முதல் 8ஆம் வகுப்புகள் திறப்பு: அறிக்கையை சமர்பித்தார் அன்பில் மகேஷ்!

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்த விரிவான அறிக்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று (செப்.16) சமர்ப்பித்தார்.

அன்பில் மகேஷ், anbil mahesh, anbil mahesh stalin
அன்பில் மகேஷ்
author img

By

Published : Sep 16, 2021, 1:29 PM IST

சென்னை: கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதன் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, தொலைக்காட்சி மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகள் நடந்து வந்தன.

இதையடுத்து, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9, 10, 11,12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கரோனா தொற்றுப் பரவல் தற்போது குறைந்துள்ள நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

விரிவான அறிக்கை

இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன் தினம் (செப்.14) காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

அக்கூட்டத்தில், கரோனா தொற்று பரவல் அடிப்படையில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை அடுத்த கட்டமாக பள்ளிகளைத் திறக்கலாம் என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் கருத்து தெரிவித்தனர்.

மாத இறுதியில் முடிவு

மேலும், அக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரின் கருத்துகளும் தொகுக்கப்பட்டு விரிவான அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (செப்.16) காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள ஊரடங்கு நீட்டிப்பு குறித்த ஆலோசனையின்போது பள்ளிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறையின் கருத்துக்களைப் பெற்று, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பது குறித்த முடிவை முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.