கிருஷ்ண ஜெயந்தி நாளை கொண்டாடப்படுவதையொட்டி, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ” கிருஷ்ணன் அவதரித்த திருநாளைக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறப்பு வாய்ந்த இந்த நன்னாளில் கிருஷ்ணன் தங்கள் வீட்டிற்கு நேரில் வருவதாக மாக்கோலமிட்டு, உணவுப் பண்டங்களைச் செய்துவைத்து, படையலிட்டு மக்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்த நெருக்கடியான நேரத்தில் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி, இயன்றதைச் செய்து மற்றவர்களுக்கு உதவிடுவோம். குழப்பமும் தடுமாற்றமும் இல்லாமல் மனதை நிலைநிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால் எடுத்த செயலில் வெற்றி பெறலாம் என்ற கிருஷ்ணனின் உபதேசத்தை நெஞ்சில் நிறுத்தி வெற்றிகளைக் குவிப்போம். விரைவில் அதர்மத்தை அடியோடு அகற்றி, தர்மம் செழித்திடுவதற்கும், சத்தியத்தையும் அன்பையும் நிலைத்திடச் செய்வதற்கும் உறுதியேற்றிடுவோம்“ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி', முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!