ETV Bharat / city

ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கியதில் பகல் கொள்ளை - வெள்ளை அறிக்கை கேட்கும் டிடிவி தினகரன்!

author img

By

Published : Apr 27, 2020, 4:20 PM IST

சென்னை: தமிழ்நாட்டிற்கு ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கியதில் பகல் கொள்ளை நடந்துள்ளதால், அது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

edappadi
edappadi

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடிமராமத்து தொடங்கி கரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்குவது வரை பணம் சம்பாதிப்பது மட்டுமே பழனிசாமி அரசின் குறிக்கோளாக உள்ளது. இவற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஏப்ரல் 24 ஆம் தேதி தீர்ப்பு அமைந்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றை கண்டறிய ஐம்பதாயிரம் ரேபிட் டெஸ்ட் (RAPID TEST KIT) கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்து, அதில் 24000 கருவிகள் வந்துவிட்டதாகவும், மேலும் நான்கு லட்சம் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகவும் அரசு கூறியது. இது தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஒரு கருவியின் விலை ரூ.600 மற்றும் ஜி.எஸ்.டி. 12 விழுக்காடு சேர்த்து, ரூ.672 க்கு வாங்கியிருப்பதாகச் சொன்னார்.

சீனாவின் WONDFO என்ற நிறுவனத்திடம் இருந்து இக்கருவிகளை ரூ.245 என்ற விலையில் டெல்லியைச் சேர்ந்த MATRIX LABS என்ற நிறுவனம்தான் இறக்குமதி செய்கிறது. இவர்களிடம் வாங்கித்தான் RARE METABOLICS நிறுவனம் இந்தியா முழுக்க சப்ளை செய்கிறது. இச்சூழலில், இரு நிறுவனங்களுக்கும் இடையே சப்ளை தொடர்பாக மோதல் எழுந்ததை அடுத்து, வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது, விலை விவரங்களைக் கேட்டறிந்த நீதிபதி, ’245 ரூபாய்க்கு வாங்கிய ஒரு கருவியை 600 ரூபாய்க்கு விற்பனை செய்வது ஏற்புடையதல்ல என்று சொல்லி, ஒரு கருவியின் விலையை வரிகள் உட்பட 400 ரூபாய் என்று நிர்ணயம் செய்து உத்தரவிட்டார் ‘.

இந்த வழக்கு விசாரணையின்போது, ‘MATRIC LABS' நிறுவனத்திடம் இக்கருவிகளை வாங்கி இந்தியாவில் விநியோகிக்கும் உரிமை எங்கள் நிறுவனத்துக்கு மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு, SHAN BIOTECH என்ற டீலர் மூலமாக MATRIC LABS நிறுவனத்தை நேரடியாக அணுகி ரூ.600 என்ற விலைக்கு 50,000 கருவிகளை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது’ என விஷயத்தைப் போட்டு உடைத்தது RARE METABOLICS நிறுவனம்.

இப்போது நாம் பழனிசாமி அரசைப் பார்த்து கேட்க நினைக்கும் கேள்விகள் இவைதான்,

  • ஒவ்வொரு முறை பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போதும் நாம் இந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை வாங்க சீனாவில் ஆர்டர் செய்திருக்கிறோம். விமானம் புறப்பட்டுவிட்டது. விரைவில் வரும் என்று பல நேரங்களில் முதலமைச்சர், சுகாதார அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் சொன்னார்களே, அது பொய்தானே?
  • அப்படியே டீலர் மூலமாக வாங்கவேண்டி வந்தாலும் விதிகளை மீறி, முகம் தெரியாத SHAN BIOTECH என்ற டீலரை அணுகியது ஏன்?
  • முதலமைச்சரும், சுகாதார அமைச்சரும் சீனத் தயாரிப்பு நிறுவனத்தை அணுகி ஒரு கருவியின் அடக்க விலை எவ்வளவு என்று கேட்கும் அடிப்படை விஷயத்தை செய்தார்களா?
  • அப்படிக் கேட்டிருந்தால், வரிகள் இல்லாமல் ரூ.245 க்கு வாங்கிய கருவிக்கு 355 ரூபாய் கூடுதல் லாபம் வைத்து விற்க முன்வந்த SHAN BIOTECH நிறுவனத்தை மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அனுமதித்தது ஏன்?
  • டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிக்கு இருக்கும் மனித நேயத்தில், ஒரு சிறு துளியாவது பழனிசாமி அரசுக்கு இருந்திருந்தால் ரேபிட் டெஸ்ட் கருவியின் விலையைக் குறைக்கச் சொல்லி பேசியிருக்கலாமே, ஏன் செய்யவில்லை?
  • ஒரு கருவிக்கு கூடுதலாக 355 ரூபாய் விலை வைத்து ஒரு பகல் கொள்ளையே நடந்திருக்கிறது. இதில் குறைந்தபட்ச லாபத் தொகை போக மீதிப்பணத்தில் யாருக்கெல்லாம் மறைமுகப் பங்கு போனது?
  • இதுகுறித்து ஒரு முறையாவது சுகாதார அமைச்சரை அழைத்து என்ன நடக்கிறது என்று முதலமைச்சர் கேட்டாரா? அப்படிக் கேட்டிருந்தால், எல்லாம் தெரிந்திருந்தும் அதை அனுமதித்தது ஏன்?
  • இப்போது ரேபிட் டெஸ்ட் கருவியின் பயன்பாடே நிறுத்தப்பட்ட நிலையில், 50,000 கருவிகளுக்காக கொள்ளையடிப்பதற்கும் சேர்த்து கொடுக்கப்பட்ட ரூ.3.36 கோடியின் நிலை என்ன?
  • மேலும் நான்கு லட்சம் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகச் சொன்னீர்களே. அதுவும் இந்த கொள்ளை விலை அடிப்படையில்தானா?
  • அப்படி அதே விலைக்குதான் என்றால், நீதிமன்றம் குறிப்பிட்ட 400 ரூபாய் என்ற விலையைத் தாண்டி, 4 லட்சம் கருவிகளுக்கு சுமார் 8 கோடி ரூபாய் கொள்ளை நடக்க இருக்கிறதே, அதற்கு என்ன பதில்?

கரோனா ஊரடங்கின் காரணமாக ஒட்டுமொத்த தமிழ்நாடும் விழி பிதுங்கி, அடிப்படை உணவுக்கே வழியின்றி தவித்து வரும் நேரத்தில், இப்படி ஒரு பகல் கொள்ளையை நடத்தத் துணிந்த மனசாட்சியற்ற பழனிசாமி அரசை நோக்கி இன்னும் ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

எனவே, இப்போதாவது கள்ள மௌனத்தை இந்த அரசு கைவிட்டு, என்ன நடந்தது என்பது பற்றி முழுமையான ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேன்டும். அத்துடன், இதுவரை நடந்த மருத்துவக் கருவிகள் கொள்முதல் விஷயங்களைப் பற்றி நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் “ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: 245 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் டெஸ்ட் கருவிக்கு, அதிமுக அரசு 600 ரூபாய் கொடுத்தது ஏன்? - ஸ்டாலின் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.