தமிழ்நாட்டில் உள்ள ஊரகப் பகுதி சாலைகள் நபார்டு வங்கி உதவியுடன் மேம்படுத்தப்படுகிறது. இதனடிப்படையில் விழுப்புரம், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள 35 சாலைகளை மேம்படுத்த முடிவுசெய்து தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 58.969 கி.மீ. தூரம் கொண்ட 20 பஞ்சாயத்து சாலைகளை மேம்படுத்த 40.31 கோடி ரூபாய், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 26.185 கி.மீ. நீளம் கொண்ட 15 பஞ்சாயத்து சாலைகளை மேம்படுத்த 20.56 கோடி ரூபாய் என மொத்தம் இரண்டு மாவட்டங்களுக்கும் சேர்த்து 85 கி.மீ. நீளமுள்ள சாலை மேம்பாட்டுக்கு 60.88 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2018 பெருவெள்ளத்துக்குப் பிறகு 147 சுரங்கங்களுக்கு அரசு அனுமதி!