சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று (ஜூன்27) ஆலோனையில் ஈடுபட்டார்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் சுற்றுப்பயணத்திற்காக நேற்று தேனி சென்றார். அப்போது அதிமுக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.
இதனிடையே நேற்று தேனி சென்ற ஓபிஎஸ் இன்று அவசரமாக சென்னை திரும்புகிறார். இந்நிலையில் அதிமுக ஆலோசனை கூட்டம் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி, தமிழ்மகன் உசேன், கேபி முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் 70க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில், அதிமுகவில் பொருளாளராக ஓபிஎஸ்-யை நீக்கிவிட்டு கே.பி.முனுசாமி நியமிப்பது குறித்து ஈபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது - ஓபிஎஸ் அதிரடி