சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான உட்கட்சி தேர்தல் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நேற்று(டிச.03) ஓட்டேரி பாஷ்யம் ரெட்டி முதல் தெருவை சேர்ந்த முதியவரான ஓம்பொடி பிரசாத் சிங்(71) என்பவர் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பபடிவம் வாங்க ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார்.
அப்போது முறைப்படி பணத்தை செலுத்தி விண்ணப்ப படிவத்தை கேட்ட போது, அதிமுக நிர்வாகிகள் சிலர் விண்ணப்ப படிவம் தர மறுத்து ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து பிரசாத் சிங் நியாயம் கேட்ட போது நிர்வாகிகள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஓம்பொடி பிரசாத் சிங் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
குறிப்பாக ஓபி.எஸ் மற்றும் ஈபி.எஸ் தூண்டுதலில் பேரில் தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும், உடனடியாக அதிமுக தலைமை அலுவலக மேனேஜரான மகாலிங்கம், மனோகர் உட்பட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் அதிமுக தலைமை அலுவலக மேனேஜர் மகாலிங்கம், மனோகரன் உட்பட 10 பேர் மீது கலகம் செய்தல், முறையற்று தடுத்தல், காயம் ஏற்படுத்துதல், சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தாமதமான அறிவிப்பு: கடும் அவதி