ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் மனு அளிக்கலாம் - அதிமுக அறிவிப்பு - admk local body election

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் மனு அளிக்கலாம் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

admk applications
author img

By

Published : Nov 10, 2019, 3:13 PM IST

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட அனுமதி கேட்கும் கட்சியினர் விருப்ப மனுக்களை வரும் 15,16 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்யலாம்.

கட்சி சார்பாக செயல்பட்டுவரும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் தலைநகரங்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பவர்களிடமிருந்து விருப்ப மனுக்களை பெறுவதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வட சென்னை வடக்கு மாவட்டத்துக்கு அவைத்தலைவர் மதுசூதனன், மாவட்டச் செயலாளர் ராஜேஷ், கிருஷ்ணகிரி கிழக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மாவட்டச் செயலாளர் அசோக்குமார், தஞ்சாவூர் தெற்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்தியலிங்கம், தென்சென்னை வடக்கு கட்சி அமைப்புச் செயலாளர் பொன்னையன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, விழுப்புரம் தெற்கு அதிமுக அமைப்பு செயலாளர் ப.மோகன், ஆர்.லட்சுமணனன், மாவட்ட செயலாளர் குமரகுரு என 56 கட்சி மாவட்டத்தில் மனுக்களை பெறுவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு வேட்புமனுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25000, மாநகராட்சி வார்டு உறுப்பினர் ரூ.5000, நகரமன்றத் தலைவர் ரூ.10000, நகரமன்ற வார்டு உறுப்பினர் ரூ.2500, பேரூராட்சி மன்றத் தலைவர் ரூ.5000, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ரூ.1500, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ரூ.5000, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.3000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Intro:உள்ளாட்சித் தேர்தலுக்கு 15,16 தேதிகளில் விருப்ப மனுBody:உள்ளாட்சித் தேர்தலுக்கு 15,16 தேதிகளில் விருப்ப மனு
அதிமுக அறிவிப்பு

சென்னை,

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 15,16 ஆகியத் தேதிகளில் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அதிமுக அறிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2019ல் அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட அனுமதி கேட்கும் கட்சியினர் விருப்ப மனுக்களை வரும் 15,16 ஆகியத் தேதிகளில் அளிக்கலாம்.
கட்சிச் சார்பாக செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் தலைநகரங்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்கும் உடன்பிறப்புகளிடமிருந்து, விருப்ப மனுக்களைப் பெறுவதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வட சென்னை வடக்கு மாவட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன், மாவட்டச் செயலாளர் ராஜேஷ், கிருஷ்ணகிரி கிழக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மாவட்டச் செயலாளர் அசோக்குமார், தஞ்சாவூர் தெற்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்தியலிங்கம், தென்சென்னை வடக்கு கட்சி அமைப்பு செயலாளர் பொன்னையன், முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, விழுப்புரம் தெற்கு அதிமுக அமைப்பு செயலாளர் ப.மோகன், ஆர்.லட்சுமணனன், மாவட்ட செயலாளர் குமரகுரு என 56 கட்சியின் மாவட்டத்தில் மனுக்களை பெறுவதற்கு குழுவினை அமைத்துள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு வேட்புமனுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாநகராட்சி மேயர் 25000, மாநகராட்சி வார்டு உறுப்பினர் 5000, நகர மன்றத் தலைவர் 10000, நகர மன்ற வார்டு உறுப்பினர் 2500, பேரூராட்சி மன்றத் தலைவர் 5000, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் 1500, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் 5000, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் 3000 என வேட்பு மனுக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை அதிமுகவினர் பெற துவங்கி உள்ளத்தில் இருந்து இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.