சென்னை நகரை அழகூட்டும் விதமாக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி பொது இடங்களில் உலோக சிற்பங்கள் வைப்பது, சுவரொட்டிகளை அகற்றுவது என பல்வேறு நடவடிக்கைகளில் மாநகராட்சி ஈடுபடுகிறது.
சுவரொட்டிகள் அகற்றம்
இதுவரை 11 ஆயிரத்து, 602 இடங்களில் இருந்து அகற்றப்பட்ட சுவரொட்டிகளின் எண்ணிக்கை 73 ஆயிரத்து, 545 ஆகும். இந்நிலையில் சுவரொட்டிகள் அகற்றப்பட்ட இடங்களில் முதல் கட்டமாக ஓவியங்கள் வரையப்படுகின்றன. அதன்படி அடையாறு திருவிக பாலம் வன உயிரினங்களின் வண்ண ஓவியங்களாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
வன உயிரினங்களின் வண்ண ஓவியங்கள்
மீன்பிடி பூனை, செங்கலடி பூனை, காட்டுப்பன்றி, கழுதை புலி, வெள்ளை கங்கை நீர், நீர் முதலை, நாரை, பட்டாம்பூச்சிகள் என 15க்கும் மேற்பட்ட வன உயிரினங்களின் வண்ண ஓவியங்கள் ஆங்கிலம், தமிழ் மொழியில் அதனுடைய பெயர், அந்த உயிரினத்தின் சிறப்பு அம்சம் குறித்து ஒரு வரியில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த வண்ண ஓவியங்கள் வாகன ஓட்டிகள், அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்வோர் என அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதையும் படிங்க: 'சத்தியமங்கலம் அருகே 75 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு'