ETV Bharat / city

நடிகர் விஷால் வீடு மீது கல்வீசிய வழக்கு...4 பேரிடம் காவல்துறையினர் விசாரணை... அதிரடி வாக்குமூலம்...! - விஷால் வீடு அண்ணா நகர் வீடு

நடிகர் விஷால் வீடு மீது கல்வீசிய வழக்கில் நான்கு பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் விஷால் வீடு மீது கல்வீசிய வழக்கு
நடிகர் விஷால் வீடு மீது கல்வீசிய வழக்கு
author img

By

Published : Sep 30, 2022, 11:43 AM IST

தமிழ் திரையலகில் முன்னணி நடிகராக உள்ள விஷாலின் வீடு அண்ணா நகரில் அமைந்துள்ளது. கடந்த 26ஆம் தேதி நள்ளிரவு திடீரென விஷால் வீட்டின் முதல் மாடியிலிருந்த கண்ணாடி மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து உடனே வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் விஷால் வீட்டில் கற்களை எரிந்துவிட்டு செல்வது பதிவாகி இருந்தது.

இது குறித்து நடிகர் விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் சிசிடிவி ஆதாரங்களுடன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து கண்ணாடியை உடைத்த நபர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று(செப்.30) காரின் பதிவு எண்ணை வைத்து காவல்துறையினர் நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

நடிகர் விஷால் வீடு மீது கல்வீசிய வழக்கு

விசாரணையில் அவர்கள் மீன் ஏற்றுமதி தொழில் செய்யும் கொளத்தூரை சேர்ந்த ப்ரவீன் குமார்(29), ராஜேஷ்(29), ஹோட்டல் நடத்தி வரும் அண்ணா நகரை சேர்ந்த சபரீஸ்வரன்(29), சிவில் என்ஜினியரான புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மணிரத்னம்(28) என்பது தெரியவந்தது.

நண்பர்களான இவர்கள் அன்றிரவு ஒன்றாக காரில் சென்று மது அருந்திவிட்டு, பின்னர் போதையில் வரும் போது திடீரென நண்பர்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. விஷால் வீட்டருகே வரும் போது தகராறு முற்றி ஒருவரையொருவர் மாறிமாறி கற்களால் வீசி தாக்கிக்கொண்டு பின்னர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அந்த சமயத்தில் தான், தெரியாமல் ஒரு கல் நடிகர் விஷால் வீட்டின் கண்ணாடி மீது பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களின் உண்மைத் தன்மை குறித்து நான்கு பேரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நடிகர் விஷால் வீட்டின் மீது தாக்குதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.