ETV Bharat / city

ரஜினியிடம் ஆசி பெற்ற மாதவன்! - ரஜினியிடம் ஆசி பெற்ற மாதவன்

நடிகர் மாதவன் தான் இயக்கிய ராக்கெட்ரி படத்திற்காக ரஜினி காந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ரஜினியிடம் ஆசி பெற்ற மாதவன்!
ரஜினியிடம் ஆசி பெற்ற மாதவன்!
author img

By

Published : Jul 31, 2022, 1:25 PM IST

நடிகர் மாதவன் இயக்கி, நடித்த திரைப்படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’, இப்படம் சமீபத்தில் வெளியாகி பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப்பெற்று வருகிறது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தைப் பார்த்த பலரும் மாதவனை பாராட்டி வருகின்றனர். மேலும் திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்துக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் பாராட்டி உள்ளனர்.

இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான மாதவன் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். உடன் நம்பி நாராயணனும் இருந்துள்ளார். இந்த வீடியோவை மாதவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராக்கெட்ரி நம்பி நாராயணன்
ராக்கெட்ரி நம்பி நாராயணன்

இந்தச்சந்திப்பு குறித்து அவரது ட்விட்டரில், 'ஒருவர் தனது துறையில் பல சாதனைகளைப் புரிந்த லெஜெண்டின் முன்னிலையில் ஆசீர்வாதங்களைப்பெறும்போது இது நிச்சயமாக வாழ்வில் பொறிக்கப்படவேண்டிய தருணம்.

ரஜினியிடம் ஆசி பெற்ற மாதவன்!

ராக்கெட்ரி படத்திற்குத் தங்களின் பாசமிகு அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. இந்த உந்துதல் எங்களை முழுமையாக புத்துணர்ச்சியடைய செய்துள்ளது. நாங்கள் உங்களை நேசிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள்... விஜய் படம் குறித்து லோகேஷ் கனகராஜ்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.