ETV Bharat / city

சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்துகொண்டவர் கைது! - Pallavaram Anakaputhur

சென்னை: அனகாபுத்தூரில் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைக் கூறி திருமணம் செய்துகொண்ட நபரை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன்
author img

By

Published : Apr 13, 2021, 12:59 PM IST

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அருண் நகர் முதல் தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (25) என்பவர் கடந்த ஆறு மாதமாக அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதியில் மகளைக் காணவில்லை எனப் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடந்த 25ஆம் தேதி சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதனடிப்படையில் காணாமல்போன சிறுமியை காவல் துறையினர் தேடிவந்த நிலையில் சிறுமி காதலனுடன் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து விசாரணையில் சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் எம்.ஆர்.கே. நகரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்துவந்தது தெரியவந்தது. காவல் துறையினர் அங்கு சென்று அவர்களை அழைத்துக்கொண்டு சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு கொண்டுவந்தனர். அதன்பிறகு சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி திருமணம் செய்துகொண்டதால் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருவரையும் ஒப்படைத்தனர்.

ராமகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.