இந்தியத் தூதரக அலுவலகச் செயலாளராக மலேசியாவில் பணியாற்றிய மல்லிகா சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'நான் மலேசியாவில் வசித்து வருகிறேன். கோவையில் எனது வீடு உள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எனது தங்கை சாந்தா, கனரா வங்கியில் எழுத்தராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். 40 ஆண்டுகளாக எனது வங்கிக் கணக்கில் மோசடி செய்து என் நகைகள் உள்ளிட்ட சொத்துக்களை என் தங்கை அபகரித்துள்ளார். இவ்வளவு காலமாக இந்த மோசடி குறித்து எனக்குத் தெரியாமல் போய்விட்டது.
தற்போது எனது வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்தபோது, சுமார் 70 லட்சம் ரூபாய் வரை, எனது பணத்தை எனக்குத் தெரியாமல் எடுத்து மோசடி செய்துள்ளார். இந்த மோசடி தொடர்பாக என் தங்கை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனிடம் புகார் கொடுத்துள்ளேன்.
அவரும் அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். என் பெயரில் 19 லட்சம் வங்கிக் கடன் வாங்கியது, எனது பெட்டகத்திலிருந்து நகைகளை எடுத்தது என பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட எனது தங்கை மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.
இதையும் படிங்க...கரும்பு விவசாயிகளுக்கு தீபாவளிக்கு முன்பே நிலுவைத் தொகை!