ETV Bharat / city

5ஆவது மெகா தடுப்பூசி முகாம் - 22 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி - சென்னை தடுப்பூசி

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாமில் 11 லட்சத்து 50 ஆயிரத்து 351 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 11 லட்சத்து இரண்டாயிரத்து 290 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி என 22 லட்சத்து 52 ஆயிரத்து 641 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

5th mega covid 19 vaccination camp in chennai

author img

By

Published : Oct 11, 2021, 9:13 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று (அக்டோபர் 10) ஐந்தாவது மெகா கோவிட்-19 தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேரில் ஆய்வுசெய்தார்.

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், முக்கிய இடங்கள் என மொத்தம் 32 ஆயிரத்து 17 மையங்களில் மெகா கோவிட்-19 தடுப்பூசி பணிகள் நடைபெற்றன.

இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்துப் பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி முதல், இரண்டாம் தவணை அளிக்க திட்டமிடப்பட்டது. இதுவரை நடைபெற்ற நான்கு மெகா முகாம்களில் கோவிட் தடுப்பூசி போடப்பட்ட விவரம்:

  1. முதலாவது சுற்று | 12-09-2021 | 28.91 லட்சம் தவணை
  2. இரண்டாவது சுற்று | 19-09-2021 | 16.43 லட்சம் தவணை
  3. மூன்றாவது சுற்று | 26-09-2021 | 25.04 லட்சம் தவணை
  4. நான்காவது சுற்று | 03-10-2021 | 17.04 லட்சம் தவணை

நேற்று (அக்டோபர் 10) நடைபெற்ற ஐந்தாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 22 லட்சத்து 52 ஆயிரத்து 641 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் முதல் தவணையாக 11 லட்சத்து 50 ஆயிரத்து 351 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 11 லட்சத்து இரண்டாயிரத்து 290 பயனாளிகளுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது அரசு கோவிட் தடுப்பூசி மையங்களில் மட்டுமே ஐந்து கோடிக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீரென சைதாப்பேட்டையில் உள்ள தடுப்பூசி தடுப்பு முகாம்களை ஆய்வுசெய்தார். மேலும், அங்கிருந்த பொதுமக்களிடம் கலந்துரையாடி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மா. சுப்பிரமணியன் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆய்வுசெய்தார். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மண்டபம், இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம் பகுதியில் அமைக்கப்பட்ட மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களை நேரில் ஆய்வுசெய்தார்.

மேலும், மாநிலத்தில் நேற்று (அக்டோபர் 10) நடைபெற்ற ஐந்தாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு இன்று (அக். 11) கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெறாது எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.