சென்னை: துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் அதிகாலை 2.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது புதுக்கோட்டையை சோ்ந்த கோபாலசாமி (61) என்ற பயணியின் உடமைகளை சோதனையிட்டபோது, அதில் டூல்ஸ் பாக்ஸ் இருந்தது.
அதிலிருந்த ஸ்பேனர், சுத்தியல், ஸ்ரூட்ரைவர் ஆகியவற்றின் உள்பகுதிக்குள், தங்க ராடுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த ராடுகளை அலுவலர்கள் உடனே பறிமுதல் செய்து, கோபாலசாமியை கைது செய்தனர். முதல்கட்ட தகவலில், மொத்தம் 11 தங்க ராடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் எடை 555 கிராம். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 26 லட்சம் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.4.21 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்