சென்னை: சேலையூர் அடுத்த பழைய ஜி.எஸ்.டி.சாலை, இரும்புலியூரில் உள்ள வீட்டில் இளம் பெண்களை வைத்து, பாலியல் தொழில் நடப்பதாக, விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நேற்று (ஏப்.6) காவலர்கள் விரைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வீட்டில் பாலியல் தொழில் நடந்துவந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 இளம்பெண்களை காவல் துறையினர் மீட்டனர். இந்த பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சடையப்பன் (26), என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த செயலில் தலைமறைவாக உள்ள முக்கிய நபர் தேடப்பட்டுவருவதாக காவலர்கள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: 'திருமண வாக்குறுதியின் பேரில் பாலுறவு'- கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!