சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அரசு சுகாதார அலுவலகத்தில் 2,857 கோடி ரூபாய் மதிப்பில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மேம்பாட்டிற்காக தமிழக அரசின் சார்பில் உலக வங்கி அதிகாரிகளுடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழகத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மேம்பாட்டிற்காக உலக வங்கியிடம் ஏற்கனவே 2,857 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அது கையெழுத்தானது என்றார்.
மேலும் அவர் , மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு தோப்பூரில் 220 ஏக்கர் நிலத்தை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை சார்பாக ஒப்படைத்துவிட்டோம். அதை வரும் ஜுன் 10ஆம் தேதி ஜப்பானிலிருந்தும், மத்திய அரசு சார்பிலும் ஆய்வு மேற்கொள்ள வருகிறார்கள் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் சுகாதாரத்துறைச் செயலாளர் பீலாராஜேஷ், உலக வங்கியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.