சென்னை: தமிழ்நாடு முழுவதும் இதுவரை 7 கோடியே 24 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 2 லட்சம் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
கடந்த மொகா தடுப்பூசி முகாம் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுறது. இந்த முகாம்களில் மக்கள் அனைவரும் தவறாமல், கலந்துகொள்ளும்படி சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட 100 வயது மூதாட்டி!