ETV Bharat / city

'காவி'யான மகா 'கவி'

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மகா கவி பாரதியாரின் தலைப்பாகை காவி நிறம்போல் மாறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Bharathiyar
author img

By

Published : Jun 4, 2019, 12:06 PM IST

Updated : Jun 4, 2019, 2:56 PM IST

தமிழ் சமூகத்திற்கு பாரதியார் தனது கவிதைகள் மூலம் பெரும் தொண்டாற்றி இருக்கிறார். மகா கவி என போற்றப்படும் அவரை தமிழ் கூறும் நல்லுலகு இன்றுவரை போற்றி வருகிறது. மேலும், அவர் இயற்றிய கவிதைகள் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் அறம் போதிக்கும் உரமாக இருக்கிறது.

இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தமிழ் பாடப்புத்தகத்தில் பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்துடன் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு காலம் வெள்ளை நிறத்துடன் இருந்த பாரதியாரின் தலைப்பாகை தற்போது திடீரென காவி நிறத்திற்கு மாறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பேசிய தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத் தலைவர் வளர்மதி, “மாநில அரசால் வழங்கப்பட்ட பாடப்புத்தகம் இது. கல்வியைப் பொறுத்தவரை மதத்திற்கோ, அரசியலுக்கோ இடமில்லை. இது தெரியாமல் நடந்திருக்கும். அப்படியாக இருந்தால் அது ஆராயப்பட்டு சரி செய்யப்படும்” என்றார்.

மேலும், இது குறித்து பாடப்புத்தகத்தை வடிவமைத்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில் அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ”ஐ.ஏ.எஸ். அலுவலர் உதயச்சந்திரன் தலைமையிலான குழு புத்தகங்களின் வடிவமைப்பினை இறுதி செய்தது. மேலும் ”ஷட்டர் ஸ்டாக்” என்கிற இணையதளத்தில் முக்கியப் படங்கள் வடிவமைப்பிற்காக பதிவிறக்கம் செய்யப்பட்டன. அதனால் அந்தப் படத்தின் நிறங்களின் தன்மை மாறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பாடப்புத்தகத்தில் அரசியலை நுழைக்க வேண்டும் என்ற எண்ணம் பாடத்திட்ட வல்லுநர் குழுவிற்கு இருக்கவில்லை. வடிவமைப்பில் இருந்தவர்கள் சமுதாய நோக்கத்தின் அடிப்படையில் செயல்பட்டனர்.

இந்த ஆண்டு பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. எனவே இந்த ஆண்டு வடிவமைப்பில் மாற்ற இயலாது. இந்த அட்டைப்பட வடிவமைப்பை எந்தவித உள்நோக்கமும் இன்றி வடிவமைத்துள்ளோம்” என்றார்.

12 ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தக  வடிவமைப்பினை மாற்ற இயலாது
சென்னை, ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தமிழ் பாடப்புத்தகத்தில் மாணவர்களின் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.   இந்த அட்டைப் படத்தில் மயில், தமிழகத்தில் நாட்டுப்புறக் கலைகள், தமிழ் கவிஞர்களின் முக்கியமாக கருதப்படும் பாரதியாரின் படத்தினை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர். பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் உள்ளது என சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.                        இதுகுறித்து பாடப்புத்தகத்தை வடிவமைத்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,
ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயச்சந்திரன் தலைமையிலான குழு புத்தகங்களின் வடிவமைப்பினை இறுதி செய்தது.

மேலும் ஷட்டர் ஸ்டாக் என்கிற  இணையதளத்தில் முக்கிய படங்களை  வடிவமைப்பிற்காக பதிவிறக்கம் செய்யப்பட்டது. அதனால்  அந்த படத்தின் நிறங்களின் தன்மை மாறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பாடபுத்தகத்தில் அரசியலை நுழைக்க வேண்டும் என்கிற எண்ணம் பாடத்திட்ட வல்லுநர் குழுவிற்கு இருக்கவில்லை.

வடிவமைப்பில் இருந்தவர்கள் சமுதாய நோக்கத்தின் அடிப்படையில் செயல்பட்டனர்.

இந்த ஆண்டு பாடபுத்தகங்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. எனவே இந்த ஆண்டு வடிவைப்பில் மாற்ற இயலாது.                                இந்த அட்டைப்பட வடிவமைப்பில் எந்தவித உள்நோக்கமும் இன்றி வடிவமைத்துள்ளோம். இதனை எந்த வித குறையும் கண்டுபிடிக்க முடியாத சிலர் குறையாக கூறி வருகின்றனர் என தெரிவித்தார்.
Last Updated : Jun 4, 2019, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.