ETV Bharat / city

சென்னை விமான நிலையத்தில் பனிமூட்டம்: 11 விமானங்கள் தாமதம்! - டெல்லி விமானநிலையம்

சென்னை: சென்னை விமான நிலையப் பகுதியில் பனிமூட்டம் காரணமாக சென்னையிலிருந்து புறப்படும் ஐந்து விமானங்கள், சென்னைக்கு வரும் ஆறு விமானங்கள் என மொத்தம் 11 விமானங்கள் தாமதமாகின.

பனிமூட்டத்துடன் காணப்பட்ட சென்னை விமான நிலையம்

author img

By

Published : Feb 27, 2021, 3:17 PM IST

விமான நிலையத்தில் திடீர் பனிமூட்டம்:

சென்னை புறநகா் பகுதிகளில் இன்று (பிப் 27) காலை ஆறு மணிக்கு மேல் திடீரென பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதையடுத்து சென்னை விமானநிலைய ஓடுபாதை பகுதிகளிலும் அதிகமான பனிமூட்டம் இருந்ததால் சென்னையிலிருந்து விமானங்கள் புறப்படுவதில் சிரமம் ஏற்பட்டது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

தாமதமாக புறப்பட்ட 11 விமானங்கள்:

இதனால் சென்னையிலிருந்து காலை 6.55 மணிக்கு ஷென்சென், 7.16 மணிக்கு பெங்களூரு, 7.30 மணிக்கு ஹைதராபாத், 8.00 மணிக்கு நாக்பூர், 8.05 மணிக்கு பேங்காக் ஆகிய ஐந்து விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல் சென்னைக்கு வரவேண்டிய ஹூப்ளி, புனே, புவனேஸ்வர், விசாகப்பட்டினம், பெங்களூரு, தோஹா ஆகிய ஆறு விமானங்களும் தாமதமாகியுள்ளன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திரும்பிச் சென்ற விமானம்:

டெல்லியிலிருந்து காலை ஏழு மணிக்கு டெல்லியிலிருந்து 107 பயணிகளுடன் வந்த (ஸ்பைஜெட்) ஏா்லைன்ஸ் தனியாா் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு திரும்பி சென்றது.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் விரைவுப் பாதை திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.