வரலாறு காணாத அளவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. கொரோனா வைரஸ் தாக்கம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு என பல காரணங்களால் கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை, மார்ச் மாத தொடக்கம் முதல் மிதமாக செயல்படுகிறது என்று தான் சொல்லவேண்டும்.
தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்தும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100 புள்ளிகளுக்கு மேல் குறைந்தும் வர்த்தமாகிவருகிறது. ஆனால் கடந்த வாரம் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்தது.
அதன் பின் இந்த மாத தொடக்கத்திலிருந்தே சிறிது உயர்ந்து தற்போது 38,800 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்துள்ளது. இது தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் அளித்த தகவல்படி, கடந்த பத்து ஆண்டுகளாக மார்ச் மாதத்தில் சென்செக்ஸ், நிஃப்டி சிறப்பாக செயல்பட்டுள்ளது.
அதன் விவரம்
ஆண்டு மாதம் சதவிகிதம் உயர்வு
- 2006 மார்ச் 10
- 2011 மார்ச் 9
- 2019 மார்ச் 7
இதனை தொடர்ந்து இந்த மாதமும், பங்குச்சந்தை சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதியில் பல கோடி ரூபாய் சேமிப்பு: காரணம் கொரோனாதான்!