ETV Bharat / business

சரிவுடன் தொடங்கிய நிதியாண்டு - கலக்கத்தில் முதலீட்டாளர்கள் - sensex down

மும்பை: இந்த நிதியாண்டின் முதல் நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன.

சரிவுடன் தொடங்கிய நிதியாண்டு
சரிவுடன் தொடங்கிய நிதியாண்டு
author img

By

Published : Apr 1, 2020, 5:36 PM IST

2019-20ஆம் நிதியாண்டின் இறுதி நாளான நேற்று சென்செக்ஸ் 1,028 புள்ளிகளும் நிஃப்டி 316 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமானது. 2020-21ஆம் நிதியாண்டின் முதல் நாளான இன்று பங்குச் சந்தைகள் உயரும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே இந்திய பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,203.18 புள்ளிகள் குறைந்து 28,265.31 நிறைவடைந்தது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 343.95 புள்ளிகள் குறைந்து 8,253.8 புள்ளிகளில் வர்த்தம் நிறைவடைந்தது.

அதிகபட்சமாக டெக் மஹேந்திரவின் பங்குகள் ஒன்பது விழுக்காடுகள் வரை சரிவைச் சந்தித்தது. அதே நேரம் ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் டைட்டன் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தை சந்தித்தன.

கரோனா காரணமாக சர்வதேச பொருளாதாரம் கடும் மந்த நிலையைச் சந்தித்துள்ளதே இந்த சரிவுக்கு காரணமாகக் கருதப்படுகிறது. இந்த சரிவு வரும் காலங்களிலும் தொடரலாம் என்ற அச்சமும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் சர்வதேச அளவிலும் ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ, சியோல் உள்ளிட்ட பங்குச் சந்தைகள் நான்கு விழுக்காடு வரை சரிவை சந்தித்தன. கச்சா எண்ணெய் விலையும் 5.20 விழுக்காடு குறைந்து, ஒரு பேரல் 24.98 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமானது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.